இன்றுடன் எவற்றிற்கெல்லாம் காலகெடு முடிகிறது?
இன்றுடன் எவற்றிற்கெல்லாம் காலகெடு முடிகிறது?
புதுடில்லி : 2016 - 2017 ம் நிதியாண்டின் கடைசி நாளான இன்று (மார்ச் 31) பல முக்கிய திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கான காலகெடு முடிவடைகிறது.
இன்றுடன் கடைசி :
பழைய ரூபாய் நோட்டுக்கள் :
பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கு அரசு அளித்திருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் 10 க்கும் அதிகமாக பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வைத்திருந்தால் அபராதம் முதலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வருமான வரி :
கறுப்பு பணம் வைத்திருப்போர், மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் தாமாக முன் வந்து தங்களின் வருமானம் தொடர்பாக கணக்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் வருமான வரி செலுத்துவதற்கு அரசு விதித்திருந்த கால கெடு இன்றுடன் முடிவடைகிறது.
👉ABOUT ON WEBSITE👈
பிஎஸ் 3 மாடல் வாகனங்கள் :
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிஎஸ் 3 மாடல் வாகன விற்பனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த வாகனங்களை விற்பனை செய்வதற்கான கால கெடுவும் இன்றுடன் முடிவடைகிறது.
ஜியோ இலவச சலுகை :
மொபைல் போன் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுகையும், பிரைம் வாடிக்கையாளர் ஆவதற்கான கால கெடுவும் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் ஜியோ ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
Comments
Post a Comment