உடல் சூட்டை குறைக்க சில டீப்ஸ்!
உடல் சூட்டைத் தணித்து, உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...
👉ABOUT ON WEBSITE👈
வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரது உடலும் மிகவும் வெப்பமாக இருக்கும். காலநிலை திடீரென்று மாறும் போது, பலர் கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் உடல்நலக் குறைவால் அவஸ்தைப்படுவார்கள்.
குளிர்காலத்தில் எப்படி உடலை வெப்பமாக வைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களைச் செய்கிறோமோ, அதேப் போல் கோடையில் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள சிலவற்றை மேற்கொள்ள வேண்டும். இங்கு கொளுத்தும் கோடையில் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
டிப்ஸ் #1
கோடையில் வெளியே செல்லும் போது, சன்ஸ்க்ரீன் லோசனைத் தவறாமல் சருமத்திற்கு பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், சூரியனின் புறஊதாக் கதிர்களால் சரும செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் சரும புற்றுநோய் வரும் அபாயமும் அதிகரிக்கும்.
டிப்ஸ் #2
டிப்ஸ் #4
எப்போதும் வெயில் காலத்தில் காரமான உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இந்த உணவுகள் உடலின் வெப்பத்தை மேன்மேலும் அதிகரிப்பதோடு, செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
டிப்ஸ் #5
கோடையில் காலை உணவை மட்டும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான காலை உணவு தான் ஒரு நாளைக்கு வேண்டிய ஆற்றலை வழங்கி, வெயிலால் மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.
Comments
Post a Comment