வாரமொருமுறை எண்ணெய் குளியல் எடுத்தால் இந்த நோய்கள் குணமாகும் !!

வாரமொருமுறை எண்ணெய் குளியல் எடுத்தால் இந்த நோய்கள் குணமாகும் !!

      

👉ABOUT ON WEBSITE👈

    
  
சனிக்கிழமை எண்ணெய் மற்றும் சீயக்காய் தேய்த்து குளிப்பதால் கோடைக்காலத்தில் பலவீதமான நோய்களில் இருந்து பாதூகப்பாக இருக்காலம்.
      
நமது இந்த வாழ்வியல் போக்கில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறோம். அதில் ஒன்றை மறந்துதான் எண்ணெய் குளியல் வாரம் தவறாமல் எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டால் ஆயுள் விருத்தியாகும். உடல் சூடு தணீயும் அதோடு உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மைகளை அள்ளித் தருகிறது..
புவி வெப்பமயமாதல், அதிவேக வாழ்க்கை முறை எனப் பல்வேறு காரணங்களால், நம்மில் பலருக்கு பித்தமும், உடல் சூடும் அதிகரித்தே இருக்கின்றன. இதற்கு, முறையான எண்ணெய்க் குளியல் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம். அதனை பயன்படுத்தும் முறை.

நல்லெண்ணெயோடு பூண்டு, சிகப்பு மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, சீரகம் உடையும் பதத்தில் இறக்கி தாங்கும் சூட்டில் பயன்படுத்த வேண்டியது.
இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. இதனை மொத்தமாய் காய்ச்சி வைத்தும் பயன்படுத்தலாம்.
சைனஸ் சார்ந்த தொல்லை இருப்பின் இதை உடல் முழுதும் தேய்த்து, தலையில் மிகக் குறைந்த அளவில் இட்டுக்கொள்ளலாம்.
10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறிய பின், குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்கு சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தினால் நன்மை.
மூட்டு வலி உடல் வலிக்கு நல்லெண்ணெயை மிதமான சூட்டில் தினமும் தடவி வர இழந்த நீர் மற்றும் எண்ணெய்ப் பற்றை மூட்டுக்களில் சேர்த்து வலி குறையவும், மூட்டுக்கள் பலப்படவும் உதவும்.
உடல் சூடு தணியும் , உடல் சோர்வு, உடல் வலி நீங்கும் , நல்ல தூக்கம் தரும். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் பிரச்சனை மறையும்.
சருமம், கூந்தல் செழிக்கும். நரம்புகள் ஊட்டம் பெறும். இதனால் நரம்பு சமபந்தப்பட்ட நோய்கள் உண்டாகாது. முக்கியமாக மூளை அமைதி பெறும்.
அடி வயிறு (கர்ப்பப்பை, கீழ்க்குடல் மூலம்/மலச்சிக்கல்) சார்ந்த பிரச்சனைகளுக்கு தமிழ் மருத்துவம் விளக்கெண்ணெய் சார்ந்த மருந்துகளையே பரிந்துரைக்கிறது.

   👉ABOUT ON WEBSITE👈


Comments

Popular posts from this blog

BLUE WHALE GAME - Warning Of Death Game

இன்றுடன் எவற்றிற்கெல்லாம் காலகெடு முடிகிறது?